×

பெயிண்டர் கொலையில் மேலும் 2 பேர் கைது

மல்லூர், ஜன.21: சேலம் மாவட்டம், நாழிக்கல்பட்டியை சேர்ந்த பெயிண்டர் திருநாவுக்கரசு. இவரை கடந்த மாதம் 17ம்தேதி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் வைத்து கும்பல் ஒன்று படுகொலை செய்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த மல்லூர் போலீசார், இதுவரை 21 பேரை கைது செய்துள்ளனர். இந்த கொலை வழக்கில், ரூரல் டிஎஸ்பி தையல்நாயகி, மல்லூர் இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையிலான தனிப்படை போலீசார், மேலும் சிலரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று, பெயிண்டர் திருநாவுக்கரசு கொலையில் தொடர்புடைய நாழிக்கல்பட்டி மாரியப்பன் மகன் கார்த்தி (எ) கார்த்திகேயன் (22), அம்பேத்கர் நகரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் நவீன்குமார் (21) ஆகிய இருவரை, நிலவரப்பட்டியில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் அலுவலகம் அருகே வைத்து, போலீசார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags : Painter ,
× RELATED பவானி ஆற்றில் மூழ்கி பெயிண்டர் பலி