ராமநாதபுரம், ஜன.21: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், ராமநாதபுரம் நேருயுவ கேந்திரா, மாவட்ட சிலம்பாட்ட இளைஞர் சங்கம், ஆயிர வைசிய மகா சபை சார்பில் இளையோர் வார விழா மற்றும் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்ட இளைஞர் நல அலுவலர் பிரவின்குமார் பரிசு வழங்கினார். ஆயிர வைசிய மகா சபை தலைவர் மனோகரன், பொதுச்செயலர் கணேசன், இணைச்செயலர் சந்தானம், மாவட்ட வளரி விளையாட்டு சங்க தலைவர் நாகேந்திரன், பெண்கள் பாதுகாப்பு அலுவலர் மைய ஒருங்கிணைப்பாளர் மோகனபிரியா ஆகியோர் பேசினர். மந்தை பிடாரி அம்மன் ஒயிலாட்டக் கலைக்குழு தலைவர் புஷ்பராஜ் தலைமையில் கலை நிகழ்ச்சி, மல்லர் கம்பம் மாணவர்களின் மல்லர் கம்பம் நிகழ்ச்சி நடந்தது. கலை வளர்மணி லோகசுப்ரமணியன் நன்றி கூறினார்.