திருப்பாச்சேத்தியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

சிவகங்கை, ஜன.21: திருப்புவனம் அருகே திருப்பாச்சேத்தியில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டது. மாவட்ட வேளாண் உற்பத்திக் குழு உறுப்பினர் சேங்கைமாறன் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்தார்.

திருப்புவனம் ஒன்றியக்குழு தலைவர் சின்னையா, துணைத்தலைவர் மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமு, கருணாநிதி, திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, விவசாயிகள் பிச்சைமணி, தினகரன், முத்துராஜா, ஜெயப்பிரகாஷ், லட்சுமணன், முத்துக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: