×

புதுவையில் புதிய உச்சத்தை எட்டிய கொரோனா ஒரே நாளில் 2,783 பேருக்கு தொற்று மூதாட்டி பலி: 1,073 பேர் டிஸ்சார்ஜ்

புதுச்சேரி, ஜன. 21: புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பிறகு நாட்டிலேயே தொற்று அதிகம் பரவும் மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளது. கடந்த 18ம் தேதி அதிகபட்சமாக 2,093 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக 2,783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் 6,444 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 2,230, காரைக்கால்- 462, ஏனாம்- 68, மாகே- 23 என மொத்தம் 2,783 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சுதந்திர பொன்விழா நகரை சேர்ந்த 95 வயது மூதாட்டி தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மார்பு நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,897 ஆக உயர்ந்து உள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 13,053 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 1,073 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என முதல் டோஸ் 9,13,761 பேருக்கும், 2வது டோஸ் 5,94,524 பேருக்கும், பூஸ்டர் டோஸ் 3,951 பேருக்கும் என மொத்தம் 15,12,236 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 3,791 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது, என புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : Corona ,Puduvayal ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...