காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி: எஸ்பி துவங்கி வைத்தார்

காஞ்சிபும்: கொரோனா பரவாமல் தடுக்க மற்றும் கட்டுபடுத்தும் வகையில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பொது இடங்களிலும், விழா நிகழ்ச்சிகளிலும், வழிபாட்டு தலங்களிலும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கடைபிடித்து அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி முறையாக செலுத்தி கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதைதொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. கலெக்டர் ஆர்த்தி, முகாமை தொடங்கி வைத்தார். இதேபோல், போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாமை எஸ்பி சுதாகர் தொடங்கி வைத்தார். இதில் 100 காவலர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அவர்களுக்கு, தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை பற்றி போலீசாருக்கு எடுத்துக்கூறி, முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முகாமில் டிஎஸ்பி (பயிற்சி) ஐமன்ஜமால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: