திமுக அவசர செயற்குழுக் கூட்டம்

பொன்னேரி: பொன்னேரியில், திமுக அவசர செயற்குழு ஆலோசனை கூட்டம் பொன்னேரி நூலக அலுவலகம் அருகே திமுக அலுவலகத்தில் நடந்தது. திமுக அவசர செயற்குழுக் கூட்டம் நடந்தது. நகர பொறுப்பாளர் டி.வி.இளங்கோவன் தலைமை வகித்தார். பொன்னேரி நகர அவைத்தலைவர் செங்கல்வராயன் முன்னிலை வகித்தார். நகர இளைஞரணி அமைப்பாளர் தீபன் வரவேற்றார். இதில் உள்ளாட்சி தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை விண்ணப்பம் வழங்குவது உள்பட பல்வேறு பணிகள் குறித்து பேசப்பட்டது. கூட்டத்தில் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பா.சுகுமாரன், ராமலிங்கம், உமா மோகன்ராஜ்,  ஈஸ்வரன், வாசுதேவன், ரவிக்குமார் மார்டின் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: