×

வைபை, எப்எம் ரேடியோ, சிசிடிவி கேமரா வசதியுடன் பஸ் பயணிகள் நிழற்குடை திறப்பு: எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் திறந்து வைத்தார்

திருவள்ளூர்: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே புறநகர் பஸ் நிறுத்த நிழற்குடை சிறிய அளவில் இருந்தது. அதில் தாழ்வாரம் ஓட்டையாகி மழை காலத்தில் தண்ணீர் ஒழுகியது. இதனால் பயணிகள் உட்கார முடியாத நிலை இருந்தது. அதனை அகற்றிவிட்டு மழை, வெயிலுக்கு அதிக மக்கள் பயன்படுத்தும் வகையில் நவீன பஸ் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரனிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20 லட்சத்தை ஒதுக்கீடு செய்த எம்எல்ஏ, வை பைவ், எப்.எம்.ரேடியோ, சிசிடிவி கேமராக்களுடன் நவீன பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடை அமைக்க உத்தரவிட்டார். அந்த பணிகள் நிறைவடைந்தது.

இந்நிலையில் புறநகர் பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட திமுக செயலாளர் திருத்தணி எம்.பூபதி, மாவட்ட நிர்வாகிகள் கே.திராவிடபக்தன், ஆர்.டி.இ.ஆதிசேஷன், ப.சிட்டிபாபு, எம்.பன்னீர்செல்வம், த.எத்திராஜ், ஒன்றிய செயலாளர்கள் கூளூர் எம்.ராஜேந்திரன், மோ.ரமேஷ், ச.மகாலிங்கம், கே.அரிகிருஷ்ணன், தா.கிறிஸ்டி, ஆர்.ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் சி.வி.ரவிசந்திரன், பொறியாளர் நகராஜன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், பணி மேற்பார்வையாளர் சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர். எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்து, ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு பஸ் பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார்.

மாவட்டத்தில் முதல்முறையாக இந்த பஸ் பயணிகள் நிழற்குடையில் நவீன வசதிகளான வைபை, எப்.எம் ரேடியோ மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும், பயணிகள் இருக்கைகளை கிரானைட் கற்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் ஜெ.சங்கர், தி.ஆ.கமலகண்ணன், டி.கே.பாபு, பொன்.பாண்டியன், பி.கே.நாகராஜ், டி.செல்வகுமார், ஜெய்கிருஷ்ணா, டி.சிவகுமார், காஞ்சிப்பாடி பி.சரவணன்,  பி.மஞ்சுளா, கேஜிஆர்.ராஜேஷ், அ.பவளவண்ணன், ஆர்.மோகனசுந்தரம், கொப்பூர் டி.திலீப்குமார், ஜே.சி.பி.கேசவன்,  டி.ஆர்.திலீபன், கே.வி.எஸ்.குபேரன் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : MLA VG ,Rajendran ,
× RELATED சென்னை அருகே சித்த மருத்துவமனையில்...