உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுகவினர் விருப்ப மனு

சென்னை: தாம்பரம் மாநகராட்சி, தாம்பரம் தொகுதியில் நடைபெற உள்ள நகர்புற, ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட  விரும்பும் திமுகவினரிடம் விருப்ப மனுக்களை பெறும் நிகழ்ச்சி, மேற்கு தாம்பரத்தில் நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட பிரதிநிதியும், குன்றத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளருமான படப்பை மனோகரன் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் தி.க.பாஸ்கரன் ஆகியோர், விருப்ப மனுக்களை பெற்றனர்.முன்னதாக, முன்னாள் தாம்பரம் நகர மன்ற துணைத் தலைவர் காமராஜ், தாம்பரம் மாநகராட்சி 49வது வார்டில் போட்டியிட, உரிய கட்டணத்தை செலுத்தி, விருப்ப மனு அளித்தார். அப்போது, தாம்பரம் தொகுதி எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, பாரதி, கருணாகரன், உட்பட ஏராளமானோர் இருந்தனர்.

விருப்ப மனுக்கள் அளித்தவர்களுக்கு வரும் 22ம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது.l தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான திமுகவினர், திருப்போரூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் இதயவர்மன் மற்றும் மாவட்ட கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் ஜெயகரன் ஆகியோரிடம் விருப்ப மனு அளித்தனர். பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ இ.கருணாநிதி உடன் இருந்தார்.l ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட 12 வார்டுகளில் திமுக சார்பாக போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் நேர்காணல், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், ஊரக தொழில் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமையில், ஆலந்தூர் தெற்கு பகுதி செயலாளர் என். சந்திரன், ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளர் பி.குணாளன் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடந்தது. இதில் 131 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

Related Stories: