சென்னையில் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் சாலைகள், பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை போன்ற வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடந்தது. இதில், சென்னை வெள்ள நீர் மேலாண்மை குழுவின் அறிவுரைகள் மற்றும் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளை விரிவாக ஆய்வு செய்தார்.

பின்னர், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர்கள் எம்.எஸ்.பிரசாந்த், விஷு மஹாஜன், எஸ்.மனிஷ், சினேகா, சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், ஷேக் அப்துல் ரஹ்மான், சிவகுரு பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: