தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் நாளை தென்காசி வருகை

தென்காசி, ஜன.21: தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு நாளை (22ம்தேதி) வருகை தரும் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு மதியம் 2.30 மணிக்கு ஆலங்குளம் காமராஜர் சிலை முன்பு தெற்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து 3மணிக்கு அத்தியூத்து சர்தார் ராஜா கல்லூரியில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிடுகிறார். 3.30 மணிக்கு சாலைப்புதூர் பகுதியில் பொது மக்கள் நாளை தடுப்பூசி எடுக்கின்றனர். அதனை அமைச்சர் பார்வையிடுகிறார். 3.45 மணி அளவில் மேம்படுத்தப்பட்ட பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்கிறார். மாலை 4 மணிக்கு பாவூர்சத்திரம் அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் தடுப்பூசி மருத்துவ முகாமையும், 4.30 மணிக்கு ராமச்சந்திரபட்டணத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிடுகிறார். 5 மணிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். 6.20 மணி அளவில் பொதிகை விரைவு ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.  எனவே திமுக நிர்வாகிகள் அனைவரும் ஆலங்குளம் காமராஜர் சிலை முன்பு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியிலும், தொடர்ந்து அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: