கடையநல்லூரில் மாற்றுக்கட்சியினர் அமமுகவில் இணைந்தனர்

கடையநல்லூர், ஜன.21:  கடையநல்லூரில் மாற்றுக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் மாவட்டசெயலாளர் அய்யாத்துரை பாண்டியன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தனர். கடையநல்லூர் நகர செயலாளர் (பொறுப்பு) கோதர்ஷா ஏற்பாட்டில் மாற்றுக் கட்சியை  சார்ந்த  முகம்மது பிலால், மும்தாஜ், நத்ஹர் பாவா, வாலிம் சாஹிப், பட்டாணி அனஸ், நத்தடு பாவா, முகம்மது மைதீன், அஜீஸ், அபூபக்கர், சித்திக், நவாஸ்,  ஜீனத் பாத்திமா, பிஷ்மி, ஆயிஷாபானு, கிருதுபானு, அஸ்மா மற்றும் கருத்தப்பாண்டி  ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் அய்யாத்துரைப்பாண்டியன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட  அவைத்தலைவர் (பொறுப்பு )ஹைதர் அலி, மாவட்ட கழக இணை செயலாளர் சுமதி கண்ணன், மாவட்ட துணை செயலாளர்கள் குமரேசராஜா, கோமதி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் (பொறுப்பு) ரஸ்கல்லா உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: