சபாநாயகர் அப்பாவு பிறந்தநாள்

பணகுடி, ஜன.21: சபாநாயகர் அப்பாவு பிறந்தநாளையொட்டி அவருக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர். ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சட்டப்பேரவையின் தலைவருமான மு.அப்பாவு பிறந்த நாளையொட்டி அவரது சொந்த ஊரான லெப்பைகுடியிருப்பில் உள்ள வீட்டில் திமுகவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். வள்ளியூர் ஒன்றிய தலைவர் சேவியர் ராஜா வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர் உள்ளிட்டோர் தலைமையில் சபாநாயகர் அப்பாவுக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சாந்தி சுயம்புராஜ், ஒன்றிய கவுன்சிலர் மல்லிகாஅருள், திமுக நகர செயலாளர் தமிழ்வாணன், வள்ளியூர் ஒன்றிய மதிமுக செயலாளர் சங்கர், அரசு ஒப்பந்ததாரர் தம்பிராஜ், காவல்கிணறு முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் அழகேஷ், கும்பிளம்பாடு முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துக்குமார், ராதாபுரம் கிளை செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் மூர்த்தி, குட்டம் பஞ்சாயத்து தலைவர் சற்குணராஜ், திமுக பிரதிநிதிகள் மு.க.மாணிக்கம், அசோக்குமார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கோபி கோபாலக்கண்ணன், பணகுடி சுதாகர், ஹரிதாஸ், வெள்ளைச்சாமி, சொரிமுத்து, காவல்கிணறு செல்வன், திமுக மகளிரணி ஆனந்தி,

உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர்.

Related Stories: