7 போலீசாருக்கு கொரோனா

மயிலாடுதுறை, ஜன.21: மயிலாடுதுறை துணை காவல் கோட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம், பாலையூர், பெரம்பூர், செம்பனார்கோவில், பாகசாலை ஆகிய காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் போலீசாருக்கு அவ்வப்போது கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் கடந்த இரண்டு தினங்களில் மயிலாடுதுறை குத்தாலம் பாலையூர் செம்பனார்கோயில் ஆகிய காவல் நிலையங்களில் பணிபுரியும் ஒரு பெண் காவலர்கள் உட்பட 7 போலீசாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது சிகிச்சை பெற்றும் தனிமையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறையில் நேற்று மட்டும் 140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

Related Stories: