குத்தாலம் அருகே மாந்தை ஊராட்சியில் அதிமுகவினர் திமுகவில் ஐக்கியம்

குத்தாலம், ஜன.21: குத்தாலம் ஒன்றியம், மாந்தை ஊராட்சியில் அதிமுக கட்சியில் இருந்து 200க்கும் மேற்பட்டவர்கள் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் மாந்தை ஊராட்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அக்கட்சியிலிருந்து விலகி நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் எம்எல்ஏவுமான நிவேதா முருகன் தலைமையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாநில திமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான அன்பழகன் ஒன்றிய குழு தலைவர்கள் மகேந்திரன், நந்தினி தர், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், மாந்தை ஊராட்சி தலைவர் சசிகலா சந்திரசேகர், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் புளோராமேரி மணிமாறன், சுந்தரமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் கண்ணன் என்கிற ராமச்சந்திரன், அதிமுக பிரமுகர் பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள், பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.

Related Stories: