இந்திய அளவிலான ஜூனியர் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற காரைக்கால் மாணவர்கள்

காரைக்கால், ஜன.21: இந்திய அளவிலான ஜூனியர் பளுதூக்கும் போட்டியில் காரைக்கால் மாணவர்கள் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்தனர்.ராஜஸ்தான் மாநிலம் உதம்பூரில் இந்திய அளவிலான ஜூனியர் மற்றும் சப்ஜூனியர் பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த அவ்வையார் அரசு பெண்கள் கல்லூரியில் பயிலும் செல்வி ஹெலான்ஜி என்ற மாணவி 52 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், அரசு மேல்நிலைப்பள்ளி தேனூரில் பயிலும் விக்ரம் என்ற மாணவன் 53 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் மற்றும் வஉசி கோட்டுச்சேரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி பூங்குழலி 43 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று புதுச்சேரி மாநிலத்திற்கு மற்றும் காரைக்கால் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.வெற்றி பெற்று பதக்கத்துடன் ஊர் திரும்பிய மாணவர்களுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, எம்எல்ஏ., நாஜீம் மற்றும் நாகதியாகராஜன், காரைக்கால் கலெக்டர் அர்ஜுன் சர்மாவையும், சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாணவர்களின் திறன்களை கண்டறிந்து ஊக்குவித்து, திறம்பட பயிற்சி அளித்த பயிற்சியாளர் கணேஷ் பாராட்டப்பெற்றார்.

Related Stories: