தி.நகர் ரங்கநாதன் தெரு உணவு விடுதியில் தீ விபத்து

சென்னை: தி.நகர் ரங்கநாதன் தெருவில் சில மாதங்களுக்கு முன்பு ‘சென்னை புட் கோர்ட்’ என்ற பெயரில் ரெஸ்டாரண்ட் திறக்கப்பட்டது. இந்த கடையில் நேற்று காலை மின்கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரும் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். தகவலறிந்த தி.நகர் மற்றும் தேனாம்பேட்டை பகுதியில் இருந்து மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி சையது முகமது ஷா தலைமையில் 2 தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் உணவு விடுதியில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

Related Stories: