×

காவல்துறை பணி கடவுள் கொடுத்த வரம் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் போலீசாருக்கு டிஐஜி அறிவுரை வேலூரில் போக்குவரத்தை சீரமைக்க ஆய்வு

வேலூர், ஜன.20: காவல்துறை பணி கடவுள் கொடுத்த வரம் ெபாதுமக்களுக்கு ேசவை ெசய்ய வேண்டும் என்று வேலூரில போக்குவரத்தை சீரமைக்க ஆய்வு செய்த டிஐஜி ஆனி விஜயா அறிவுரை கூறினார். வேலூர்-காட்பாடி சாலை, அண்ணாசாலை, ஆற்காடு சாலை உள்ளிட்ட பகுதிகளில் வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது வேலூரில் போக்குவரத்து ெநரிசலுக்கு தீர்வுகாண என்ன நடவடிக்கை எடுக்கலாம். போக்குவரத்தில் ஏதாவது மாற்றம் செய்யலாமா? என்று ஆய்வு செய்தார். மேலும் இதுகுறித்து வேலூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சீனிவாசனிடம் கேட்டறிந்தார். இதையடுத்து வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் ஆய்வு ெசய்தார். அப்போது காவல்நிலையங்களுக்கு வெளியே நின்றிருந்த பொதுமக்களிடம் என்ன பிரச்னைக்காக வந்துள்ளீர்கள் என்று விசாரித்தார். ெதாடர்ந்து காவலநிலையத்திற்குள் ெசன்று ஒவ்வொரு அறையாக சென்று பார்வையிட்டார். காவல்நிலையம் உங்கள் வீடு போல நினைத்து எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக கழிவறையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மீண்டும் வந்து ஆய்வு செய்வேன்.

ேமலும் காவல்துறை பணி என்பது கடவுள் கொடுத்த வரம், அதனைக்கொண்டு ெபாதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றார். இதையடுத்து போலீசாருக்கு வாரவிடுமுறை விடப்படுகிறதா? என்று ஒவ்வொரு போலீசாரையும் தனித்தனியாக அழைத்து விசாரித்தார். ஒரு ெபண் ேபாலீஸ், போலீசாருக்கான ஷூ அணியாமல் மாற்று ஷூ அணிந்திருந்தை கேட்டு, அதனை உடனே மாற்ற அறிவுறுத்தினார். பொதுமக்கள் ெகாடுக்கும் புகார்கள் மீது எந்தவிதமான தாமதமும் இன்றி உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தவிதமான பாரபட்சமும் காட்டக்கூடாது என்று அறிவுறுத்தினார்.

இதுகுறித்து வேலூர் சரக டிஜஜி ஆனி விஜயா கூறுகையில், ‘வேலூர் சரகத்துக்கு உட்பட்ட 4 மாவட்டங்களிலும் 2 நாட்கள் போக்குவரத்தை சரிசெய்ய ஆய்வு ெசய்கிறேன். வேலூர் மக்கான், அண்ணாசாலை, காட்பாடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தேன். 2 நாட்களுக்கு பிறகு ஆலோசனை கூட்டம் நடத்தி, போக்குவரத்து பிரச்ைனக்கு தீர்வு காணப்படும். அதோடு 4 மாவட்டங்களிலும் போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு ெசய்ய உத்தரவிட்டுள்ளேன். தொடர்ந்து விதிமீறினால் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Tags : God ,DIG ,Vellore ,
× RELATED தேவ ரகசியத்தை உடைக்கலாமா? : ஜோதிட ரகசியங்கள்