கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் வேலூரில் நடந்தது ஊர்தி அனுமதிக்காததை கண்டித்து

வேலூர், ஜன. 20: டெல்லியில் நடைபெற உள்ள இந்திய குடியரசு தினவிழா ஊர்வலத்தில் தமிழக அரசின் ஊர்தியை ஒன்றிய அரசு அனுமதிக்காததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேலூர் தலைமை தபால் நிலையம் எதிரே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் காவேரி, சரோஜா, துரை செல்வம் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான லதா கலந்துகொண்டு பேசினார். இதில், டெல்லி குடியரசு தினவிழாவில் தமிழக அரசின் ஊர்தியை அனுமதிக்காததை கண்டித்தும், உடனே அனுமதிக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதேபோல் அண்ணா கலையரங்கம் அருகே முத்தமிழ்சுவை மற்றும் தமிழ் இலக்கிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்எல்ஏ வாலாஜா அசேன் தலைமை தாங்கினார். இதில் திரளானோர் பங்கேற்று, தமிழக அரசின் ஊர்தியை அனுமதிக்காததை கண்டித்து கோஷமிட்டனர்.

Related Stories: