(தி.மலை) வளர்ச்சிப் பணியை ஒன்றியக்குழு தலைவர், பிடிஓ ஆய்வு தண்டராம்பட்டு அடுத்த வரகூர் ஊராட்சியில்

தண்டராம்பட்டு, ஜன.20: தண்டராம்பட்டு அடுத்த வரகூர் ஊராட்சியில் நேற்று நடைபெற்ற 100 நாள் வேலை திட்டத்தில் பாதை, பொதுமக்கள் பயன்படுத்தக் கூடிய கழிவறை, பக்க கால்வாய் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன் பிடிஓ மகாதேவன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, ஊராட்சி மன்ற தலைவர் தனகோட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, பணிகளை உடனடியாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரவேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: