(தி.மலை) 700 கால்நடைகளுக்கு தடுப்பூசி ராயண்டபுரம் ஊராட்சியில்

தண்டராம்பட்டு, ஜன.20: தண்டராம்பட்டு அடுத்த ராயண்டபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மூலம் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் திவ்யபாரதி ஜெயப்பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் சந்திரா மொட்டையன் துவக்கி வைத்தனர். முகாமில் குடற்புழு நீக்கம், தொற்று நோய்களுக்கு தடுப்பூசி போடுதல், செயற்கை முறையில் கருவூட்டல், சினைப் பரிசோதனை, கால்நடைகளுக்கு ஆண்மை நீக்கம் செய்தல், மலட்டு நீக்கம் சிகிச்சை, கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி உள்ளிட்ட 700 கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது. கால்நடை மருத்துவர் சாந்தி, பராமரிப்பு உதவியாளர் செல்வம், துணைத்தலைவர் தனலட்சுமி ஜெமினி, கிளை செயலாளர்கள் வேலாயுதம், குபேந்திரன், விஏஓ சம்பத், ஊராட்சி செயலாளர் கிறிஸ்துவ ராஜ் ஆகியோர் ஊட்டச்சத்துடன் இருந்த 3 கால்நடைகளை தேர்வு செய்து அதன் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: