3 குழந்தைகளின் தாய் தற்கொலை

திருப்புத்தூர், ஜன.20: திருப்புத்தூர் அருகே மூன்று குழந்தைகளின் தாய் குடும்ப பிரச்னை காரணமாக நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். திருப்புத்தூர் அருகே கம்பனூரை சேர்ந்தவர் வயிரவன். வெளிநாட்டில் உள்ளார். இவரது மனைவி ஆதிசெல்வி(34). இவர், மாமியார் வீட்டின் அருகே 2 மகள்கள், ஒரு மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில், ஆதிசெல்விக்கும், அவரது மாமியாருக்கும் குடும்ப பிரச்னை காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த ஆதிசெல்வி நேற்று மின்விசிறியில் சேலையால் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். நாச்சியாபுரம் போலீசார் ஆதிசெல்வியின் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நாச்சியாபுரம் காவல் நிலைய எஸ்.ஐ. சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories: