மேகமலை புலிகள் காப்பக மலைக்கிராமங்களில் சர்வே செய்யும் பணி தீவிரம்

தேனி, ஜன. 20: தேனி மாவட்டத்தில் மேகலை வனப்பகுதியில் புலிகள் காப்பகம் அமைய உள்ள வனக்கிராமங்களில் சர்வே செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் மேகமலை புலிகள் காப்பகம் அமைய உள்ளது. புலிகள் காப்பகம் அமைய உள்ள பகுதியில் தும்மக்குண்டு, வாலிப்பாறை, மஞ்சனூத்து, அஞ்சரைப்புலி, வேல்அண்ணாநகர், வேல்இந்திராநகர், நொச்சிஓடை, புலிக்காட்டு ஓடை, ராஜீவ் நகர், பொம்முராஜபுரம், இந்திரா காலனி உள்ளிட்ட பல கிராம்கள் உள்ளன. இக்கிராமங்களில் குடியிருப்போர், செய்யும் விவசாயம், குடியிருக்கும் வீடுகளின் தரம், விவசாய நிலங்களின் தன்மை உள்ளிட்டவை குறித்து சர்வே செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. இதன்படி, வனத்துறை, வருவாய்த் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறுத் துறையை சேர்ந்தவர்கள் குழுவாக சேர்ந்து சர்வே செய்யும் பணியை துவக்கி உள்ளனர். ஒரு குழுவில் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, 10க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு சர்வே செய்யும் பணி நடந்து வருகிறது.

Related Stories: