×

திருமங்கலத்தில் உள்ள ஹோமியோபதி கல்லூரியில் நேரடி வகுப்புகள் துவக்கம்

திருமங்கலம், ஜன.20: திருமங்கலத்தில் உள்ள ஹோமியோபதி கல்லூரியில் நேரடி வகுப்புகள் கடந்த 46 நாள்களுக்கு பின்பு நேற்று முதல் துவங்கின. மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் அரசு ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி உள்ளது. இதில் 350 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக திருமங்கலம்  ஹோமியோபதி மருத்துவக்கல்லூரியை சுற்றி உரப்பனூர் மற்றும் மறவன்குளம் கண்மாய் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மாணவர்களின் நலன் கருதி கடந்த டிசம்பர் மாதம் 3ம் தேதி முதல் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் விடுதி மாணவ, மாணவியர் தங்களது ஊர்களுக்கு திரும்பினர். பின்னர் டிசம்பர் இரண்டாம் வாரம் முதல் ஆன்லைன் வகுப்புகள் துவங்கி நடைபெற்றன.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கத்துவங்கிய நிலையில் கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு தமிழக அரசு ஜன.31ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவக்கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டதால் திருமங்கலம் அரசு ேஹாமியோபதி மருத்துவக்கல்லூரி தொடர்ந்து ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வந்தன.  இந்த நிலையில் கல்லூரி வளாகத்தினை சுற்றியுள்ள கண்மாய் தண்ணீர் பாதிக்கும் மேல் வடிந்துவிட்டநிலையில் 46 நாள்களுக்கு பின்பு நேற்று முதல் இந்த கல்லூரியில் நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டன. இதில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் வரலாம் என அறிவிக்கப்பட்டதால் நேற்று முதல் மாணவர்கள் வரத்துவங்கியுள்ளனர். இதுகுறித்து  ேஹாமியோதிபதி கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் கூறுகையில், `` அரசு கொரேனா வழிகாட்டுதல்படி நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் இயங்கி வருகின்றன. காலை ஒரு பிரிவும், மாலையில் மற்றொரு பிரிவிற்கும் வகுப்புகள் நடத்தி வருகிறோம்’’ என்றார்.

Tags : College of Homeopathy ,Thirumangalam ,
× RELATED திருமங்கலம் பகுதியில்...