அண்ணா அரசு கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் அமைப்பு

மோகனூர், ஜன.20: மோகனூர் தாலுகாவில் கொரோனோ தொற்று அதிகரித்து வருவதால், லத்துவாடியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, லத்துவாடியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் தயார் செய்யும் பணியில் மோகனூர் தாசில்தார் தங்கராஜ் ஈடுபட்டுள்ளார். இம்முகாமில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட உள்ளது. சுமார் 150 படுக்கைகள் அமைக்கப்பட உள்ள இந்த முகாமில், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு தங்கும் அறை தயார் செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மையம் தயார் செய்யும் பணியில், மண்டல துணை தாசில்தார் கணபதி, லத்துவாடி ஆர்ஐ பாப்பாத்தி, விஏஓ ஜான்போஸ்கோ ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: