தீ விபத்து நிவாரணம்: அமைச்சர் வழங்கினார்

திட்டக்குடி, ஜன. 20:  கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சியப்பன், இவரது மனைவி பச்சையம்மாள். சில நாட்களுக்கு முன்பு இவர்களின் வீட்டில் இருந்த சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென வெடித்ததில் வீடு முழுவதும் தீ பற்றி முற்றிலும் எரிந்து நாசமானது. இதில் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. இதுபற்றி அறிந்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கொளஞ்சியப்பன் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி அரிசி, வேட்டி, சேலை, போர்வை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்கினார். இவர்களுக்கு அரசால் வழங்கப்படும் தொகுப்பு வீடு வழங்க ஆணையிட்டார். ஒன்றிய செயலாளர்கள் பட்டூர் அமிர்தலிங்கம், மலையனூர் செங்குட்டுவன், பாவாடை கோவிந்தசாமி, மங்களூர் ஒன்றிய குழு தலைவர் சுகுணா சங்கர், துணைத்தலைவர் கலைச்செல்வி செல்வராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு அபுபக்கர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: