செஞ்சி அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி

செஞ்சி,  ஜன. 20: செஞ்சி அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். செஞ்சி அருகே உள்ள கவரை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன்.  இவரது மகன்கள் பாலகிருஷ்ணன் (11), கதிரவன் (7) ஆகிய இருவரும் கடகம் பூண்டியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது கிணற்றில் தவறி விழுந்த கதிரவன் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து  தகவல் அறிந்ததும் செஞ்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று  சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இறந்துபோன  கதிரவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான்.

Related Stories: