×

இயந்திரம் மூலம் அறுவடை பணி நாகை மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாங்க ரூ.21.13 லட்சம் ஒதுக்கீடு

நாகை, ஜன.20: நாகை மாவட்டத்தில் வேளாண் இயந்திரமயமாக்கல் துணை திட்டத்திற்காக விவசாயிகள் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க ரூ.27.13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, குறித்த காலத்தில் பண்ணைப் பயிர் சாகுபடி செய்ய வசதியாக வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் நாகை மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்படவுள்ளது. இதற்காக ரூ.27.13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கத் திட்டத்தின் கீழ் நடப்பு நிதி ஆண்டில் பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு 20 எண்கள் ரூ.13.24 லட்சம் மானியத்திலும், ஆதிதிராவிடர் பிரிவு விவசாயிகளுக்கு 15 எண்கள் ரூ.13.89 லட்சம் மானியத்திலும் என மொத்தம் 35 எண்கள் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் ரூ.27.13 லட்சம் மானியத்தில் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தில் டிராக்டர்கள் 2, பவர்டில்லர் 22, சுழற்கலப்பை 2, விசைத்தெளிப்பான் 8, டிரைலர் 1 முதலிய வேளாண் கருவிகள், இயந்திரங்கள் மானிய தொகையில் வழங்கப்படும். உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் விவசாயி தனது ஆதார் எண்னை பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து www.agrimachinery.in என்ற இணைய தள முகவரியில் பதிவு செய்து தங்களுக்குத் தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை தங்களது சுயவிருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Nagai district ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...