கொரியன் கராத்தே, வில்வித்தையில் கீழ்வேளூர் அரசு பள்ளி மாணவர் சாதனை

கீழ்வேளூர், ஜன.20: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த இருக்கை கீழ பெருந்தலக்குடி குக்கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுனரான விஜயகுமார் மகன் மோகன்குமார்(12). இவர் கீழ்வேளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் இறுதியில் கோவா மாநிலத்தில் நடந்த தேசிய யானமூடோ (கொரியன் தற்காப்பு பயிற்சி) போட்டியில் கலந்துகொண்டு 2 வெண்கலப்பதக்கத்தை வென்றார்.

மேலும் டிசம்பர் மாதம் குற்றலாத்தில் நடந்த மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அடுத்து மார்ச் மாதம் நடக்கவுள்ள ஆசிய யான்மூடோ போட்டியில் கலந்துகொள்ள உள்ளார். பதக்கம் வென்ற மோகன்குமாரை சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன், திருவாரூர் எம்எல்ஏ பூண்டிகலைவாணன், கீழ்வேளூர் எம்எல்ஏ., நாகைமாலி உள்ளிட்ட பலர் பாராட்டினர்.

Related Stories: