காரைக்காலில் தொடர் சாலை விபத்து அமைச்சர் நேரில் ஆய்வு

காரைக்கால், ஜன.20: காரைக்கால் மேற்கு புறவழிச்சாலை மக்கள் பயன்பாட்டிற்கு வந்து வெகு நாட்களாகியும் மின் விளக்குகள் சரிவர இயங்காததால், தொடர் சாலை விபத்துகள் மற்றும் கால்நடைகளால் மனித உயிரிழப்புகள் அதிகரிப்பதாகவும் மற்றும் பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமையில் திடீர் ஆய்வு மேற்க்கொண்டனர். இதில் காரைக்கால் கலெக்டர் அர்ஜூன் சர்மா மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வீரசெல்வம் மற்றும் நகராட்சி ஆனையர் செந்தில்நாதன், மின்துறையை சேர்ந்த உதவி செயற்பொறியாளர் அனுராதா மற்றும் எஸ்பி., ரகுநாயகம் ஆகியோர் ஆய்வில் கலந்துகொண்டனர்.

அப்போது அமைச்சர் சந்திரபிரியங்காவிடம் கலெக்டர் கூறியது: பொதுப்பணித்துறை மூலம் ரூ.2 கோடி திட்ட மதிப்பீட்டில் ஹட்கோ நிதி உதவியுடன் சூரியசக்தி உயர் மின்விளக்கு பொருத்த திட்டம் தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்தார். மேலும் கலெக்டரிடம், அமைச்சர் கால்நடைகளால் இரவு நேரத்தில் வருபவர்கள் விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார். நகராட்சி மூலம் கால்நடைகளை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் காவல்துறையினர் இரவு நேரங்களில் கூடுதல் ரோந்து செல்லும்படியும் போலீசாருக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா அறிவுறுத்தினார்.

Related Stories: