பெரம்பலூரில் 2 இடங்களில் காவல்துறை சார்பில் சிறப்பு மனு விசாரணை முகாம்

பெரம்பலூர், ஜன.20: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 காவல் உட்கோட்டத்திற்கான சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்ட எஸ்பி மணி உத்தரவின் பேரில் நேற்று 19ம் தேதி பெரம்ப லூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் மற்றும் மங்களமேடு ஆகிய 2 காவல் உட்கோட்டங்களிலும் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.இதில் மங்களமேடு உட்கோட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (தலைமையிடம்) ஆரோக்கிய பிரகாசம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு மனு விசாரணை முகாமில் 28 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 27 மனுக்க ளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது. பெரம்பலூர் உட்கோட்டத்தில் டிஎஸ்பி (சட்டம் ஒழுங்கு) சஞ்சீவ்குமார் தலைமையில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. இவற்றில் 18 மனுக்கள் பெறப்பட்டு அ வற்றில் 15 மனுக்களுக்கு உடனடியாக தீர்வுகாணப்பட்டது.

Related Stories: