ஆலத்தியூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

செந்துறை, ஜன.20: செந்துறை வட்டம் ஆர்எஸ். மாத்தூர் அடுத்துள்ள ஆலத்தியூர் கிராமத்தில் நேற்று சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி துவக்கி வைத்தார். கால்நடை மருத்துவர்கள் தர்மராஜ், ராமதுரை, தென்றல் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கால்நடைகளை மருத்துவ பரிசோதனை மேற்க்கொண்டு சிகிச்சை அளித்தனர். 450 மாடுகள், 1,500 ஆடுகள் என சுமார் 2000 கால்நடைகளுக்கு சேற்றுப்புண், குடற்புழு நீக்க மாத்திரை, சினை பரிசோதனை, செயற்கைமுறை கருவூட்டல், கறவைமாடுகளுக்கு தாது உப்பு மருத்துவம் மற்றும் இதர பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறப்பாக வளர்க்கப்பட்ட கால்நடைகளை தேர்வு செய்து அதன் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Related Stories: