மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருமெய்ஞானம் தியாகிகளுக்கு நினைவஞ்சலி

தா.பழூர், ஜன.20: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அனுமார் கோயில் கீழவீதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் ஜனவரி- 19 ல் தியாகிகள் தினமான நேற்று கொடி ஏற்றி வைத்து, திருமெய்ஞானம் தியாகிகளான அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதுபோல் அரியலூர் ஜெயங்கொண்டம், திருமானூர், ஆண்டிமடம், செந்துறை ஆகிய பகுதிகளில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. தா.பழூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். இதில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் மகாராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செல்வராசு, சிலம்பரசன், மாவட்டக்குழு தங்கராசு, கிளைச் செயலாளர் காமராஜ், காளிமுத்து, சூசை, பன்னீர்செல்வம், பாலுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

Related Stories: