கோமாபுரம் அரசு பள்ளி வளாகத்தில் கொட்டப்படும் குப்பைகள்

கந்தர்வகோட்டை, ஜன.20: கந்தர்வகோட்டை அருகே கோமாபுரம் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதால் கொசு பெருக்கமும், துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குப்பைகளை சாலையோரங்களிலும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக கொட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: