ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜன.20: குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்த ஒன்றிய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலர் மாதவன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் இந்திரஜித் பேசினார். மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories: