எம்.தெற்கு தெரு கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

கறம்பக்குடி, ஜன.20: கறம்பக்குடி அருகே எம்.தெற்கு தெரு கிராமத்தில் நேற்று விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை புதுகை திமுக எம்எல்ஏ முத்துராஜா திறந்து வைத்தார்.அப்போது அவர் பேசுகையில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அனைவரும் இடைதரகர்கள் இன்றி தாங்கள் விளைவித்த நெல்லை நேரடியாக கொள்முதல் செய்து பயன்பெறலாம். மேலும் விவசாயிகளின் நலன் கருதி நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அரசு மூலம் துவக்கி வைக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் எம்.தெற்கு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: