பாபநாசத்தில் ஜீவானந்தம் நினைவு தினம்

கும்பகோணம், ஜன.20: பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றியக்குழு சார்பில் முன்னாள் சுதந்திர போராட்ட வீரர் ஜீவானந்தம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பாபநாசம் அண்ணாசிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சாமு.தர்மராஜன் தலைமை வகித்து ஜீவானந்தம் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லைவனம், ஒன்றிய நிர்வாககுழு உறுப்பினர் பரமசிவம், பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், நகர பொருளாளர் சேகர், ஒன்றியகுழு உறுப்பினர் நாகராஜ், விவசாய சங்க ஒன்றிய தலைவர் பொய்யாமொழி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: