சத்தியமங்கலம் ஊராட்சியில் கால்நடை சிகிச்சை முகாம்

கும்பகோணம், ஜன.20: கும்பகோணம் அருகே சத்தியமங்கலம் ஊராட்சியில் கால்நடைகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாமில் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா சத்தியமங்கலம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருத்துவம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. எம்எல்ஏ ஜவாஹிருல்லா கலந்துகொண்டு கால்நடைகளுக்கான மருத்துவமுகாமை தொடங்கி வைத்து சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் கால்நடைகளை பராமரிப்பது குறித்தும், கால்நடைகளை தாக்கும் நோய் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். இந்த முகாமில் சத்தியமங்கலம் ஊராட்சியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கால்நடைகள் லந்து கொண்டு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் பெற்றன.ஊராட்சி மன்ற தலைவர், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: