திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் விவசாயிகளிடம் மனுபெறும் நிகழ்ச்சி எஸ்பி தலைமையில் நடந்தது

திருவாரூர், ஜன.20: திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று எஸ்பி விஜயகுமார் தலைமையில் விவசாயிகளிடம் கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் விவசாயிகளிடம் கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சி நேற்று எஸ்.பி அலுவலக வளாகத்தில் எஸ்.பி விஜயகுமார் தலைமையிலும், ஏடிஎஸ்பி அன்பழகன் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.இதுபோன்ற கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட எஸ்.பி விவசாயிகளின் மனுக்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: