முத்துப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டை,ஜன.20: முத்துப்பேட்டை மீன்வள உதவி ஆய்வாளர்அலுவலகம் முன்பு காங்கிரஸ் மீனவர் பிரிவு சார்பில் மீன்வளத்துறையில் கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடு மற்றும் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதற்கு மாவட்ட மீனவர் பிரிவு தலைவர் நிஜாம்தீன் தலைமை வகித்தார். மாநில சிறுபான்மை பிரிவு நிர்வாகி ஹாஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் துறைக்காடு மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், உண்மையான மீனவர்களுக்கு நிவாரணம் வழங்காமல் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும், கடை வைத்திருப்பவர்களுக்கும் நிவாரணம் வழங்கும் மீன்வள ஆய்வாளரை கண்டித்தும் கண்டித்தும் கோசங்கள் எழுப்பபட்டது. இதில் மாவட்ட செயலாளர் சுந்தரராமன், வட்டார தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: