பாசனத்திற்காக தொப்பையாறு அணையில் இன்று தண்ணீர் திறப்பு

தர்மபுரி, ஜன.19: தர்மபுரி அருகே தொப்பையாறு அணை பாசனத்திற்காக இன்று(19ம் தேதி) திறக்கப்படுகிறது. தொப்பூர் அருகே தொப்பையாறு அணை உள்ளது. இந்த அணை கடந்த 1980 முதல் 1985ம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. அணையின் மொத்த கொள்ளளவு 50.18 அடியாகும். நீர்பிடிப்பு பகுதியாக ஏற்காடு சேர்வராயன் மலை, வே.முத்தம்பட்டி வனப்பகுதி மற்றும் மலைக்குன்றுகள் உள்ளன. தொப்பையாறு அணை சமீபத்தில் பெய்த மழையில் நிரம்பியது.

அதன் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. தொப்பூர், கம்மம்பட்டி, காட்டுவளவு, சேலம் மாவட்டம் மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தொப்பையாறு அணை மூலம் பாசன வசதி பெறுகின்றன.இந்நிலையில், தொப்பையாறு அணை நிரம்பியதையடுத்து, பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை அரசு ஏற்று, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (19ம் தேதி) தொப்பையாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுகிறார். இதற்கான ஏற்பாடுகள் தர்மபுரி மாவட்ட நிர்வாகம், நீர்வளத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்தனர்.

Related Stories: