×

வெங்கல் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே வெங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை, போலீசார் கைது செய்தனர். பெரியபாளையம் அருகே வெங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது, உத்தரவின்பேரில் வெங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார், வெங்கல் எம்ஜிஆர் நகரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அங்கு நுழைந்து தீவிர சோதனை நடத்தினர். அங்கு, 1.5 கிலோ எடையுள்ள கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை கண்டு பிடித்து, பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்பாபு (38), அவரது கூட்டாளி பாகல்மேடு சவுந்தர்ராஜன் (48) ஆகியோரை கைது செய்தனர்.  பின்னர் அவர்களை, திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் போலீசார் அடைத்தனர்.

Tags : Vengal ,
× RELATED சீத்தஞ்சேரி-வெங்கல் சாலையில் கேமரா...