தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா பொதுமக்கள் பீதி

தேனி, ஜன. 19: தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. இதுவரை 1132 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் 779 பேருக்கு பரிசோதனை செய்ததில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை நேர முடிவுப்படி 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்களில் தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் பணிபுரியும் டாக்டர், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் உள்ள நர்சிங் மாணவியர் சுமார் 8 பேர், போலீசார் 8 பேர் என பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், போடி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மட்டும் சுமார் 85க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

Related Stories: