நற்சேவை விருது வழங்கும் விழா

சிவகங்கை, ஜன.19: சிவகங்கை அருகே ஒக்கூர் மாசாத்தியார் நகரில் 5ம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் நற்சேவை விருது வழங்கும் விழா நடந்தது. தமிழ்ச் செம்மல் பகீரத நாச்சியப்பன் தலைமை வகித்தார்.  ஒக்கூர் ஊராட்சி மன்ற தலைவி பூமா அருணாச்சலம் முன்னிலை வகித்தார். சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் காளிராசா சிறப்புரையாற்றினார். ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி கண்ணன், ஆசிரியர் காந்தன், பாண்டிச்சாமி வாழ்த்தி பேசினர். இந்த ஆண்டில் நற்சேவை புரிந்த செவிலியர் ஆதிலட்சுமி, மின்வாரிய அலுவலர் உத்தண்டிராயர், ஓட்டுநர் பிரசாத்குமார், கொரோனா பேரிடர் உதவியாளர் கப்பல் பொறியாளர் கண்ணன், தபால்துறை அஞ்சலர் அழகுராணி ஆகியோருக்கு நல்லெண்ணமே நல்வாழ்வு அமைப்பின் சார்பில் நற்சேவை விருது வழங்கப்பட்டது.

Related Stories: