மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் பாதிக்கு பாதி பெண்களுக்கு ஒதுக்கீடு

மதுரை, ஜன. 19: மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் பெண்களுக்கு ஆதிதிராவிடர் ஒதுக்கீட்டில் 4 வார்டுகளும், பொது வார்டில் பெண்களுக்கு 46 வார்டுகளும் என பாதிக்கு பாதியாக 50 வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மதுரை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன.  தமிழகத்தில் மாநகராட்சிகளுக்கான வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு ஆதிதிராவிடர் (பெண்கள்), ஆதிதிராவிடர் (பொது), பழங்குடியினர் (பெண்கள்), பழங்குடியினர் (பொது), பெண்கள் (பொது) வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டு பட்டியல் விபரம் வருமாறு:  ஆதிதிராவிடர் (பெண்கள்): 30, 59, 88, 100 ஆகிய 4 வார்டுகள் உள்ளன.  ஆதிதிராவிடர் (பொது): 31, 71, 77 ஆகிய 3 வார்டுகள் உள்ளன. பெண்கள் (பொது): 1, 2, 4, 5, 6, 8, 10, 12, 14, 15, 17, 20, 22, 26, 28, 32, 33, 34, 35, 42, 44, 45, 46, 47, 48, 50, 51, 54, 55, 56, 57, 60, 61, 69, 70, 75, 78, 79, 85, 86, 89, 94, 95, 96, 97, 98 என மொத்தம் 46 வார்டுகள் உள்ளன. பழங்குடியினர் (பொது) மற்றும் பழங்குடியினர் (பெண்கள்) வார்டுகள் இல்லை.  பொது வார்டுகள்: 3, 7, 9, 11, 13, 16, 18, 19, 21, 23, 24, 25, 27, 29, 36, 37, 38, 39, 40, 41, 43, 49, 52, 53, 58, 62, 63, 64, 65, 66, 67, 68, 72, 73, 74, 76, 80, 81, 82, 83, 84, 87, 90, 91, 92, 93, 99 என மொத்தம் 47 வார்டுகள் உள்ளன. இத்தகவலை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Related Stories: