அருள் சித்தா கிளினிக் வளாகத்தில் அன்னதானம்

ஈரோடு, ஜன. 19: ஈரோடு கரூர் பைபாஸ் ரோடு,ஆர்டிஓ அலுவலகம் அருகே உள்ள அருள் சித்தா கிளினிக் வளாகத்தில் அமைந்திருக்கும் சத்திய ஞான சபையில் வடலூர் வள்ளலாரின் 151-வது ஆண்டு தைப்பூச நிகழ்ச்சி நடைபெற்றது. சன்மார்க்க கொடியினை ஆடிட்டர்  பிரபு ஆறுமுகம் ஏற்றினார்.  குடவாசல் மூலங்குடி நிலக்கிழார் சுவாமிநாதன் அன்னதானத்தை துவக்கி வைத்தார். ரிதம் கார் டெக்கர்ஸ் குமார் தனது குடும்பத்துடன் அன்னதானம் வழங்கும் பொறுப்பை ஏற்று நடத்தினார். இதில் அருள் சித்தா கிளினிக் மருத்துவர் எஸ்.சிவானந்தம், ஆல்பா லேப் புஷ்பா குபேரன், கிள்ளியூர் சேகர், சன்மார்க்கம் ஜெயம் கலந்து கொண்டனர். முன்னதாக அகவல் பாராயணத்தினை காயத்ரி, காவியா, கீர்த்தி ஆகியோர் நடத்தினார்கள். ஏற்பாடுகளை வடலூர் தலைமை  சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க மாநில துணைத் தலைவரும், அருள் சித்தா கிளினிக் நிறுவனருமான அருள் நாகலிங்கம்  செய்திருந்தார்.

Related Stories: