பொதுப்பணித்துறை எச்சரிக்கை தா.பழூர் அருகே முன்னறிவிப்பின்றி ஜல்லிக்கட்டு மாடுகளை அவிழ்த்து விட்ட 39 பேர் மீது வழக்கு

தா.பழூர், ஜன.19: தா.பழூர் அருகே உள்ள கீழ மைக்கேல்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் அக்கிராமத்தில் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டார்.அப்போது கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் 30க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றுகூடி தொற்று பரவும் வகையில் எந்தவித முன்னறிவிப்பும் அனுமதியும் இன்றி ஜல்லிக்கட்டு மாடுகளை அவிழ்த்து விட்டு சட்டவிரோதமாக ஒன்று கூடி கலகம் செய்யும் விதமாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளித்தார்.அதன் பேரில் எஸ்ஐ ரவிச்சந்திரன் கீழமைக்கேல் பட்டியை சேர்ந்த சின்னப்பன், குழந்தைசாமி, சவரிமுத்து, சதீஷ்கோபி, ராணி, நாகேஷ், ஏசு ராணி, சித்ரா, ஜேம்ஸ் உள்பட 39 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: