×

தைப்பூசத் திருநாளையொட்டி விராலிமலை முருகன் கோயில் அடிவாரத்தில் பக்தர்கள் வழிபாடு

விராலிமலை, ஜன.19: விராலிமலை முருகன் மலைக்கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்கள் கோயிலின் அடிவாரத்தில் வெளியே நின்று வழிபாடு நடத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் இருப்பதால் நேற்று இக்கோயில் சாத்தப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு அனுமதியில்லாமல் வழக்கம்போல் நான்கு கால பூஜை மட்டும் தடையில்லாமல் நடந்தது. மலைமேல் செல்லும் யானைப்பாதை, வாகனங்கள் செல்லும் தார் சாலை பாதை மற்றும் 207 படிகள் கொண்ட பாதைகள் என அனைத்து பாதைகளும் தடுப்பு கட்டைகள் அமைத்து போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டு மலைமீது ஏறி செல்ல முயலும் பக்தர்களை தடுத்து நிறுத்தி வழிபாட்டை கீழே நடத்தி கொள்ளுமாறு அறிவுறித்தினர்.

மேலும் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு சில பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயில் வரும் பக்தர்களுக்கு மலை மேலே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் அடிவாரத்திலேயே தேங்காய், பழம் வைத்து பூஜை செய்து வழிபாடு நடத்தி சென்றனர்.பல்வேறு உபயதாரர்கள் சார்பில் ஆங்காங்கே வாகனங்களில் பல்வேறு கலவை சாதங்கள் பெரிய அளவிலான பாத்திரங்களில் வைத்து பேப்பர் தட்டுகள் மூலம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.



Tags : Viralimalai Murugan Temple ,Thaipusam ,
× RELATED தமிழக கோவில்களும் வழிபாடு முறைகளும்!!!