திருச்சியில் பூட்டை உடைத்து ஜவுளிக்கடையில் சேலை, நைட்டி திருடிய சுள்ளான்கள் 2 பேர் கைது

திருச்சி, ஜன.12: திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் மரியம் நகரை சேர்ந்தவர் வினோத்(47). காந்தி மார்க்கெட் அலங்கநாதபுரத்தில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். கடந்த 8ம் தேதி இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரில் கடையின் பூட்டை உடைத்து 5 சேலை, 25 நைட்டி மற்றும் ரொக்கம் ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டதாக தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், 2 சிறுவர்கள் கடையின் பூட்டை உடைத்து துணிகளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி துணிகளை திருடிய தாராநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், கல்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இபி ரோட்டில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

Related Stories: