கமிஷனர் துவக்கி வைத்தார் கோரிக்கையை ஏற்று திருச்சி ஏர்போர்ட்டில் சரக்கு முனையம் மீண்டும் திறப்பு

திருச்சி, ஜன.12: திருச்சி விமான நிலையத்தில் மூடப்பட்டிருந்த சரக்கு முனையம் கோரிக்கையை ஏற்று மீண்டும் திறக்கப்பட்டது. நிர்வாக காரணங்களால் கடந்த 9ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை விமான நிலைய சரக்கு முனையம் மூடப்படுவதாக விமான நிலைய இயக்குனர் தர்மராஜ் கடந்த 7ம் தேதி தெரிவித்தார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சரக்கு போக்குவரத்து முனையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என ஏற்றமதியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த சூழலில் நேற்று முன்தினம் பகல் 2 மணி முதல் சரக்கு போக்குவரத்து முனையம் மீண்டும் திறக்கப்படுவதாக விமான நிலைய இயக்குனர் தர்மராஜ் அறிவித்தார். அதன்படி சரக்கு போக்குவரத்து முனையம் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: