வரும் 14 முதல் 18ம் தேதி வரை சித்தர் கோயிலுக்கு பக்தர்கள் வர தடை

இளம்பிள்ளை: கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு அறிவிப்பின்படி இளம்பிள்ளை அடுத்த கஞ்சமலை சித்தர் கோயிலுக்கு வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களும், பக்தர்களும் சாமி தரிசனம் செய்யவோ, முடி காணிக்கை செலுத்தவோ, கிணறுகளில் நீராடவோ, தீர்த்தக்குடம் எடுத்து செல்லவோ அனுமதி இல்லை. இதற்கு பொதுமக்கள், பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோயில் செயல் அலுவலர் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: